உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலாந்துார் கோயில் கும்பாபிஷேகம் : ஹெலிகாப்டரில் மலர் துாவி கோலாகலம்

வாலாந்துார் கோயில் கும்பாபிஷேகம் : ஹெலிகாப்டரில் மலர் துாவி கோலாகலம்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்துார் அங்காள ஈஸ்வரி, வால குருநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஹெலிகாப்டர் மூலம் மலர் துாவி நடந்தது. இக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு புதிய 101 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.


முன்னதாக ஜூன் 8 ல் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை துவங்கியது. காலை 8:40 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் புனிதநீர் கலந்த மலர்கள் கோயில் கோபுரம், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. சுவாமிகளுக்கு மகா அலங்காரம், மகா தீபாராதனை , அன்னதானம்நடந்தது. விழா ஏற்பாடுகளை பூசாரி குருவப்பநாயுடு வசவன் நாகம நாயக்கர், ஆரியபட்டி சின்னிவீரத்தேவர், சொக்கத்தேவன்பட்டி கட்டக்கிடாத்தேவர், சக்கிலியங்குளம் வெள்ளையாண்டித்தேவர், ஆ.கன்னியம்பட்டி சின்னக்காமத்தேவர் ஆகிய நான்கு தேவர் வகையறாக்கள், ஏழு பள்ளைய ராஜாக்கள், நாட்டாமங்கலம் அக்கா மகன் சக்கரை, காடுபட்டி அருதிவீரத்தேவர்,சூடான் புளியங்குளம் அக்கா மகன்சூடாத்தேவர் வகையறாக்கள் செய்திருந்தனர். பூஜைகளை உசிலம்பட்டி புத்துார் முருகன் கோயில் பிரதான அர்ச்சகர் ராம்குமார் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !