ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு கோயிலில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் துவங்கியது. வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாண வைபவத்தை ரகு பட்டர் நடத்தினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதி புறப்பாடாகி, அனுப்பு மண்டபம் அடைந்து, ஊடல் பாட்டு, பட்டயம் வாசித்தபின் ஆஸ்தானம் அடையும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் பிச்சாடனர் புறப்பாடும், இரவு 8 மணிக்கு மேல் தேர் கடாசித்தல், வையாளி பார்த்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை 7:45 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் முத்துராஜா, செயல் அலுவலர் ஜவஹர், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.