உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லல் சாய்பாபா கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா

கல்லல் சாய்பாபா கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா

கல்லல்: கல்லலில், சாய்பாபா கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

கல்லலில் உள்ள கற்பக விநாயகர், சாய்பாபா, நாகநாதசுவாமி கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 9 ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்துசாந்தி, கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதற்கால பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு யாத்ராதானம் கடம் புறப்பாடு நடந்தது. காலை 9.50 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், தொடந்து மூலவர் கும்பாபிஷேகமும், அபிஷேக ஆராதனையும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆறுமுகம் தேவகி குடும்பத்தார்கள் செய்திருந்தார். பிச்சை குருக்கள், பிரகாஷ் பட்டர் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !