மாப்பிள்ளை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1253 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் தேவிமுருகன் மஹால் திருமண மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட மாப்பிள்ளை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலூர் நகராட்சித் தலைவர் முருகன், செவலை ரோட்டில், புதிதாக கட்டியுள்ள தேவிமுருகன் மஹால், தேவிமுருகன் மினி ஹால், தேவி முருகன் ரெசிடென்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 9:00 மணி அளவில் கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க மூல கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள், பக்தர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நகராட்சித் தலைவர் முருகன், தேவிமுருகன் வரவேற்று, நன்றி கூறினர்.