உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர், பிளாக் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விநாயகர், பிளாக் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே உள்ள அருள்மிகு விநாயகர், பிளாக் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

சின்னதடாகம் அருகே உச்சையனூர், தென்றல் நகரில் உள்ள இக்கோவிலில், விழா மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம் உச்சையனூர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து முளைப்பாரி தீர்த்தங்கள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கோபுர கும்பாபிஷேகம், விநாயகப் பெருமான், பிளாக் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தச தரிசனம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி, 24 நாட்கள் மண்டல பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !