வெள்ளகோவில் கல்யாண சுப்பிரமணியருக்கு வைகாசி விசாக சிறப்பு பூஜை
ADDED :1280 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோளீஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர் சுவாமிக்கு நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று காலை சுப்பிரமணியருக்கு 22 திரவியங்கள் அடங்கிய அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர்க்கு மாலை 6 மணி அளவில் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உற்சவமூர்த்தி அலங்காரம் செய்யப்பட்டு கோவிலை வலம் வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.