உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி விசாகம் விழா

லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி விசாகம் விழா

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி விசாக கொடியேற்றம் மே 30ல் நடந்தது. நேற்று முன்தினம் பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேகம் நெய்வேத்திய பூஜைகள் நடந்தன. இரவு கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று பக்தர்கள் முடி காணிக்கை நேர்த்திக் கடனைச் செலுத்தி பொங்கல் வைத்து ஆராதனை செய்தனர். கருட வாகனத்தில் காட்சியளித்தார். பட்டிவீரன்பட்டி நாகேஸ்வரி அம்மன் கோயிலில் 16 வகையான அபிஷேகங்கள் முருகனுக்கு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகனை பக்தர்கள் வழிபட்டனர். அய்யம்பாளையம் மலைமேல் அமைந்துள்ள அருள் முருகன் கோவிலிலும் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !