திருப்பரங்குன்றம் கோயிலில் விரைவு தரிசனத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலா ?
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று வைகாசி விசாக பால்குட திருவிழா நடந்தது. பக்தர்கள் விரைவு தரிசனத்திற்கு ரூ. 100 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ரூ. 100க்கான ரசீது கொடுக்கப்பட்டு ரூ 200 வசூலிக்கப்பட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் வெளியானது.
இதுகுறித்து கோயில் துணை கமிஷனர் சுரேஷிடம் கேட்டபோது, பணியாளர்களிடம் விசாரிக்கப்பட்டது. ஒருவரிடமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே பெறப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. என தெரிவித்தனர். கட்டண விபரம் விரைவு தரிசன பாதைக்கு மேல்பகுதியில் போர்டு வைக்கப்பட்டுள்து. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திருக்கலாம். உண்மை நிலை என்ன என்பது அப்போதே தெரிந்திருக்கும். பணியாளர்கள் தவறு செய்திருந்தால் நடவடிக்கையும் எடுக்க ஏதுவாக இருந்திருக்கும். மதியம் 3:00 மணிவரை 1,500 பக்தர்கள் விரைவு தரிசனம் வழியாக சென்றுள்ளனர். எந்த புகாரும் வரவில்லை. என்றார்.