உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணமார் கோயில் கும்பாபிஷேகம்

அண்ணமார் கோயில் கும்பாபிஷேகம்

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அவிநாசி ரோடு அம்மா பாளையம்தில் மஹாகணபதி, கன்னிமார், அண்ணமார், பொன்னர் சங்கர், கோவில் உள்ளது. கோவில் அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரன மஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை 9.05 மணிக்கு மேல் 10.05 மணிக்குள் நடைபெற்றது. விழாவையொட்டி, முன்னதாக காலை இரண்டாம் கால யாக பூஜை, மண்ட பார்ச்சனை, நாடிசந்தானம், கலச புறப்பாடு, ஆகியவற்றை தொடர்ந்து, கோபுரம், மூலாய மூர்த்தி, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !