ரேணுகாதேவி மாரியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்
ADDED :1245 days ago
திருப்புவனம் : திருப்புவனம் சக்தி குழு சார்பாக 42 வது ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. படித்துறை விநாயகர் கோயிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம், திருப்புவனம் புதூர், சந்தன கோபாலகிருஷ்ணன் கோயில் வழியாக புதூர் ரேணுகாதேவி மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. பின் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தபட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பால்குட ஊர்வலத்தில் பங்கேற்றனர்.