உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமாரியம்மன் கோவில் திருவிழா

கருமாரியம்மன் கோவில் திருவிழா

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் கருப்பராயபுரத்தில் உள்ள, கருமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த, 7ம் தேதி பூச்சாட்டுடன், இக்கோவில் திருவிழா துவங்கியது. அன்று அம்மனுக்கு காப்பு கட்டி, கம்பம் நடப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்று பவானி ஆற்றின் அருகே உள்ள சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இருந்து, அலங்காரம் செய்த அம்மன் சுவாமியை, கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதில் ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலையில் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைக்கப்பட்டது. இவ்விழாவில் கருப்பராயபுரம், கருப்பராயன் குட்டை, இந்திரா நகர், ஐயப்பன் நகர், அரவிந்த் நகர் ஜீவானந்தபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !