உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்சிறுவளூரில் செடல் திருவிழா

தென்சிறுவளூரில் செடல் திருவிழா

வானூர் : தென்சிறுவளூர் அதிஉக்ரகாளியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது.வானூர் ஒன்றியம் தென்சிறுவளூர் அதிஉக்ரகாளியம்மன் கோவில் ஆடித் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது.விழாவையொட்டி கடந்த 3ம் தேதி காலை 108 பால்குட ஊர்வலமும், அம்மனுக்கு பால்அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், செடல் உற்சவம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. பகல் 12.30 மணிக்கு சாகைவார்த்தல், மாலை ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது. இரவு 7மணிக்கு அம்மனுக்கு சிறப்பு ஆராதனையும், 108 விளக்கு பூஜை வழிபாடும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !