உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்து காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு

கொண்டத்து காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு

அனுப்பர்பாளையம் : பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் 1,000 ஆண்டு பழமை வாய்ந்தது. கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகள் ஆனதால், திருப்பணி செய்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுதொடர்பான ஆலோசனை கூட்டம், அமைச்சர் ஆனந்தன் தலைமையில் நடந்தது. கோவில் கோபுரங்கள், பிரகாரங்களுக்கு வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் செய்துவிட்டு, தொடர்ந்து திருப்பணிகள் செய்யலாம் என ஒரு தரப்பினரும், கோவிலில் கர்ப்பகிரகம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவற்றை ஓராண்டுக்குள் கட்டி விடலாம். அதை கட்டிவிட்டு கும்பாபிஷேகம் நடத்தலாம். என மற்றொரு தரப்பினரும் கூறினர். இறுதியாக, கும்பாபிஷேகம் செய்து கோவில் திருப்பணி செய்யலாமா, திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தலாமா என அம்மனுக்கு விசேஷ பூஜை செய்து உத்தரவு பெறலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தலைமை பூசாரி சிராஜ் தலைமையில் நேற்று விசேஷ பூஜை நடத்தி உத்தரவு பெறப்பட்டது.
கோவில் கோபுரங்கள், பிரகாரங்களுக்கு வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் நடத்தலாம் என உத்தரவு வந்தது. கும்பாபிஷேகம் எப்போது நடத்தலாம் என்பது குறித்து பொதுமக்களை அழைத்து கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. விசேஷ பூஜையில், அமைச்சர் ஆனந்தன், ஊராட்சி ஒன்றிய தலைவர் சாமிநாதன், செயல் அலுவலர் சரவணபவன் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !