அமைச்சாரம்மன் கோவிலில் வசந்தோற்சவ பெருவிழா
ADDED :4924 days ago
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அம்மன் கோவிலில் வசந்தோற்சவ விழா நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் அமைச்சாரம்மன் கோவிலில் கடந்த 3ம் தேதி பகல் 12 மணிக்கு சாகை வார்த்தலுடன் வசந்தோற்சவ விழா துவங்கியது. இரவு சுவாமி வீதியுலாவும் மறுநாள் வழக்காடு மன்ற நிகழ்ச்சியும் நடந்தது. பக்தி, பண்பாட்டிற்கு பெரிதும் துணை நிற்பவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் அன்பழகன், சண்முகவடிவேல் ஆகியோர் வாதிட்டனர். பேராசிரியர் அறிவொளி நடுவராக செயல்பட்டார். நேற்று மஞ்சள் நீராட்டுடன் வசந்தோற்சவ பெருவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை ஆயிர வைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.