உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெல் ஸ்ரீநிவாஸ பெருமாள் கோவில் திருபவித்ரோத்ஸவம் நிறைவு

பெல் ஸ்ரீநிவாஸ பெருமாள் கோவில் திருபவித்ரோத்ஸவம் நிறைவு

திருச்சி: திருச்சி கைலாசபுரம் "பெல் ஸ்ரீநிவாஸ பெருமாள் கோவிலில் நாளை பவித்ரோத்ஸவ உற்சவம் நிறைவடைகிறது.பெருமாள் கோவில்களில் திரு ஆராதனம் மற்றும் ஏனைய திருவிழாக்களில் நம்மையும் அறியாமல் தவறுகள் நேரலாம் என்ற காரணத்ததால், ஒவ்வொரு ஆண்டும் பவித்ரோத்ஸவம் கொண்டாடப்படுகிறது.பவித்ரோத்ஸவத்தின்போது மூலவர் முதல் கோவிலில் உள்ள அனைத்து மூர்த்திக்களுக்கும் மந்திரத்தினால் பூஜிக்கப்பட்ட, மஞ்சளில் நனைத்தெடுக்கப்பட்ட நூல் மாலைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. இரண்டு வேளையிலும் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.தினமும் சுமார் 70க்கும் மேற்பட்ட திருவாராதனங்கள் என மொத்தம் 360ம் , திருமஞ்சனம், புறப்பாடு, தொடர் வேத மற்றும் திவ்ய பிரபந்த பாராயணம், விஷேசமான பிரசாதங்கள் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.இதனால் பெருமாளுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பங்கேற்கும் பக்தர்களுக்கும், உலகத்துக்கும் பலவித சிறப்பான நன்மைகளையும் அளிக்கக்கூடியதாக பவித்ரோத்ஸவம் கருதப்படுகிறது. திருச்சி கைலாசபுரம் "பெல் டவுன்ஷிப்பில் உள்ள பத்மாவதி ஸமேத ஸ்ரீநிவாஸ பெருமாள் கோவிலில், திருப்பவித்ரோத்ஸவ உற்சவம் கடந்த இரண்டாம் தேதி அங்குரார்ப்பணத்துடன் துவங்கியது. மூன்றாம் தேதி பூர்ணாஹூதி, பெருமாள் புறப்பாடும், நான்கு மற்றும் ஆறாம் தேதி வரை பூர்ணாஹூதி, சாற்றுமறை, பெருமாள் புறப்பாடும் நடந்தது. நாளை (7ம் தேதி), 81 குடத்தில் திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், பெருமாள் புறப்பாடு உடன் உற்சவம் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீவேங்கடாஜலபதி ஸேவா சமிதியினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !