அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா
ADDED :1248 days ago
அலங்காநல்லூர்: மதுரை சத்திரப்பட்டி அருகே கூளபாண்டியில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு உற்ஸவ விழா 30 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. மே 31ல் முனியாண்டி சுவாமி கோயில் முன் பிடி மண் வழங்கப்பட்டது. ஜூன் 14 ல் அய்யனார் சுவாமி குதிரை புறப்பட்டு கிராம சாவடியில் வைக்கப்பட்டு வாண வேடிக்கையுடன் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.