உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலில் மஹா தரிசன நிகழ்ச்சி : சுவாமி வீதி உலா

திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலில் மஹா தரிசன நிகழ்ச்சி : சுவாமி வீதி உலா

திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவில் மஹா தரிசன நிகழ்ச்சியில் நடராஜர், விசாலாட்சி அம்மன்  மற்றும் வீரராகவப்பெருமாள் தாயாருடன் வீதி உலா நடந்தது.

திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, 5ல் கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 6ல் கொடியேற்றம் நடந்தது. 12ம் தேதி தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இன்று மஹா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடராஜர், விசாலாட்சி அம்மன்  மற்றும் வீரராகவப்பெருமாள் தாயாருடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !