திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம்
ADDED :1578 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாத பிறப்பை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.
பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணபொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது.