உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் அருகே மணிமுத்தாறில் ’கஜேந்திர மோட்சம் ’

திருக்கோஷ்டியூர் அருகே மணிமுத்தாறில் ’கஜேந்திர மோட்சம் ’

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் அருகே கருவேல்குரிச்சி மணிமுத்தாற்றில் சவுமியநாராயணப் பெருமாள் கஜேந்திரருக்கு மோட்சம் அளிக்கும் வைபவம் நடந்தது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று முன்தினம் காலை 7:45 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் ஆடும் பல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பாடாகி கருவேல்குரிச்சி மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. பின்னர் மாலையில் சுவாமிக்கு அபிேஷகம் ந டந்து மண்டபத்தைச் சுற்றி பத்தி உலாத்துதல் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்து திவ்ய பிரபந்த கோஷ்டி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி மணிமுத்தாற்றில் ‛ கஜேந்திர மோட்சம்’ வைபவம் நிகழ்ந்தது. தொடர்ந்து மண்டபத்தில் ஆடும் பல்லக்கில் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !