உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை

முதுகுளத்தூர் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் ஐயப்பன் கோயிலில் சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் ஆனி முதல் தேதி முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது. குருநாதர் திருமால்,உதவி குருநாதர் கிருஷ்ணன் தலைமை வகித்தனர்.முதுவை சாஸ்தா டிரஸ்ட் தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார். கணபதி ஹோமம் தொடங்கி சிறப்பு பூஜை நடந்தது. பின்பு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், படிபூஜை,பஜனை பாடல்கள் பாடினர். சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !