படித்துறை வரத விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :1248 days ago
சோழவந்தான்: சோழவந்தான் படித்துறை வரத விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகளை பட்டர் கார்த்திக் செய்தார். ஏற்பாடுகளை மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார். வாடிப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை கோயில் நிறுவனர் கோபிநாத் செய்தார். நாகமலைபுதுக்கோட்டை ஆனந்த ஐயப்பன் கோயிலில் கற்பக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகி சோமசுந்தரம் செய்தார்.