ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் தரிசனம்
ADDED :1526 days ago
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத் சாமி தரிசனம் செய்ய வந்தவரை திருப்பதி எம்.பி. மத்தில. குருமூர்த்தி, ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பிஎஃப்பு.மதுசூதன் ரெட்டி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக. சீனிவாசலு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சாகர் பாபு கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோயிலுக்குள் சென்றவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசீர்வாதம் செய்ய செய்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.