தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நாளை யோக தின நிகழ்ச்சி
ADDED :1236 days ago
தஞ்சாவூர் : சுவாமி விவேகானந்தர் யோக மார்க்கத்தை உலகேங்கும் பரப்பிய முதல் இந்து துறவி ஆவார். அதன் தாக்கத்தினால் இன்று உலக யோகா தினம் சர்வதேச அளவில் செங்வாக்கு பெற்றுள்ளது. சுவாமி விவேகானந்தர் கர்ம, ஞான, பக்தி மற்றும் ராஜயோகம் ஆகிய யோகங்களை நம்முடைய வளர்ச்சிக்காக வழங்கினார். தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நாளை 21ம் தேதி காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை யோக தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற விருக்கிறது. நிகழ்ச்சியை யோகா மாஸ்டர் பரமானந்தம் மற்றும் அவரது குழுவினர் வழங்குகின்றனர். விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என சுவாமி விமூர்த்தானந்தர் குறிபிட்டுள்ளார்.