உலக நன்மைக்காக லலிதா சகஸ்ரநாம பாராயணம் மற்றும் ருத்ர ஜபம்
ADDED :1284 days ago
அவிநாசி: ஸ்ரீ ருத்ர ஜபம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்த்த ஸமாஜம் சார்பில், ஸ்ரீ ருத்ர ஜபம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. திருப்பூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் உள்ள கோவில்களில் உலக நன்மைக்காக சிவனுக்கு உகந்த ஸ்ரீ ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம் மற்றும் லலிதா சகஸ்ர நாம பாராயணம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஆச்சார்யாளின் ஆசிகளுடன், ஓடக்காடு ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்த்த ஸமாஜம் சார்பில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தொடர் பாராயணம் வாசித்தனர்.