கருவலூரில் மகா சண்டியாகம்
ADDED :4847 days ago
அன்னூர் : கருவலூர் மாரியம்மன் கோவிலில், மகா சண்டி யாகம், வரும் 10ம் தேதி நடக்கிறது. கருவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த ஆண்டு, மகா சண்டி யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி மாலை விநாயகர் பூஜை, மாத்ருகா பூஜை, பாராயணம் ஆகியவை நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை 6.00 மணிக்கு கணபதி யாகம், வேதிகார்ச்சனை, சண்டி யாகம், கன்னியா பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, மகாபிஷேகம், கலசாபிஷேகம் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.