தேய்பிறை அஷ்டமி ஆறகளூர் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :1284 days ago
ஆத்துார்: தேய்பிறை அஷ்டமியையொட்டி ஆறகளூர் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சேலம் மாவட்டம், தலைவாசல், ஆறகளூரில் உள்ள காமநாதீஸ்வரர் கோவிலில், 8 பைரவர் சிலைகள் உள்ளன. அங்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட, 16 வகை அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், காலபைரவர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் ஆத்துார் கைலாசநாதர் கோவிலில் உள்ள பிரித்யங்கிராதேவி, சொர்ண பைரவருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் பிரித்தியங்கிராதேவி அருள்பாலித்தார். வீரகனுார் கங்காசவுந்தரேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும், தேய்பிறை அஷ்டமிக்கு பூஜை நடந்தது.