உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் நவபாஷாணத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

தேவிபட்டினம் நவபாஷாணத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. கடலுக்குள் அமைந்துள்ள இந்த நவபாஷாணத்தில், முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும், குழந்தை பாக்கியம், திருமணத்தடை, உள்ளிட்ட பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டியும், பரிகார பூஜைகள் செய்வதற்காக, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாண கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் சிரமம் அடையும் நிலை தொடர்கிறது. கடலில் நீராடிய பின்பு, உடைமாற்றும் அறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லாத நிலை உள்ளது. தற்போது அரசு பல்வேறு நவக்கிரக கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவிபட்டினம் நவபாஷாண திருக்கோவிலுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !