உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயிலில் 108 கோபூஜை

கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயிலில் 108 கோபூஜை

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை கிராமத்தில் பிரசித்திபெற்ற காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முழுவதும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு நாளை மகா கும்பாபிஷேகம் 23ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 17ம் தேதி அனுக்சை, விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. 19ம் தேதி  முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை 6ம் கால யாகசாலைபூஜை முன்பாக கோயில் அருகே 108 பசுக்கள் அழைத்துவரப்பட்டு பசு, கன்றுகளுக்கு மாலை மற்றும் புது வஸ்திரங்கள் அணிவித்து  சிவபுரம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில்  பெங்களூர் சபேச சிவாசாரியார் மற்றும் சிவாச்சாரியார்கள் தீபாரானை காட்டி கோபூஜை  செய்தனர். இதில் தொழிலதிபர்கள் சென்னை டெக்கான்மூர்த்தி, மயிலாடுதுறை விஜயகுமார், உபயதாரர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாளை  23ம் தேதி காலை 8ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹுதியாகி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து காலை 10 மணிக்கு மேல் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !