வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்ஸவம் : புஷ்ப அலங்காரத்தில் அம்மன்
ADDED :1308 days ago
சோழவந்தான்: சோழவந்தான் வைகை ஆற்றில் நடந்த வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்தில் எழுந்தருளிய ஜெனகை மாரியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இக்கோயில் வைகாசி திருவிழா ஜூன் 6 கொடியேற்றத்துடன் துவங்கி 17 நாட்கள் நடந்தது. நேற்று மாலையில் கோயில் கம்பத்தில் கொடி இறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவுற்றது. புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பொன்னுரஞ்சலில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி இளமதி, உபயதாரர் பால்பாண்டியன் குடும்பத்தார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.