உலக அமைதிக்காக பிரம்மகுமாரிகள் ஊர்வலம்
ADDED :1212 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் உலக அமைதி வேண்டியும், யோகா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அமைதி ஊர்வலம் நடந்தது. இயக்க பொறுப்பாளர் உமாமகேஸ்வரி தலைமையில் காமராஜர் சிலையில் இருந்து கிளம்பிய ஊர்வலம், நகரின் பல்வேறு வீதிகள் வழியாக மகாத்மா வித்யாலயா பள்ளியில் வந்தடைந்தது. அங்கு இராஜயோக தியானப் பயிற்சி நடந்தது. இயக்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.