முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி விழா: அம்மனுக்கு சக்தி கரகம்
ADDED :1554 days ago
சோழவந்தான்: தேனூர் கட்டப்புளி நகர் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி உற்ஸவ விழா மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் வைகை ஆற்றில் இருந்து அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். 2ம் நாள் பக்தர்கள் பால்குடம் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து சென்று வைகை ஆற்றில் கரைத்தனர். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.