குன்றக்குடி ரத்தினவேலிற்கு மகேஸ்வர பூஜை சிறப்பு வழிபாடு
தேவகோட்டை: தேவகோட்டையில் ரத்தினவேலிற்கு மகேஸ்வர பூஜை நடந்தது. குன்றக்குடியில் உள்ள ரத்தினவேல் பழநிக்கும், தேவகோட்டையில் இரண்டு இடங்களுக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதனடிப்படையில், ஆனி வெள்ளிக்கிழமையான நேற்று காலை குன்றக்குடியில் இருந்து எடுத்து வரப்பட்ட ரத்தினவேல் கைலாசவிநாயகர் கோவிலிலிருந்து பூஜை களுக்குப் பின் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தி.ராம. சாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட வைரக்கற்களும் பொறிக்கப்பட்ட ரத்தினவேல் அங்குள்ள அலங்கரிக்கப்பட்ட முருகனின் கையில் சாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேலை வெளியே எடுத்தால் 16 மூடை அரிசியில் சாதம், மதிய உணவு தயார் செய்து வேலிற்கு மகேஸ்வர பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரத்தினவேல் அணிந்த முருகனை தரிசனம் செய்தனர்.