ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர தொழில்துறை முதன்மைச் செயலாளர் தரிசனம்
ADDED :1384 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில தொழில்துறை முதன்மைச் செயலாளர் கரிகாலவல்லவன் குடும்பத்தாரோடு இன்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் சிறப்பு ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபட்டதை தொடர்ந்து ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் ஸ்ரீகாளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் கரிகாலவல்லவனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினார் .மேலும் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசீர்வாதமும் செய்யப்பட்டனர்.