திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ. 55 லட்சம் உண்டியல் வருமானம்
ADDED :2 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள், உப கோயில்கள் உண்டியல்கள் நேற்று கோயில் துணை கமிஷனர் செல்வி, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி கமிஷனர் இளங்கோ, முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ. 55 லட்சத்து 17 ஆயிரத்து 631ம், தங்கம் 323 கிராம், வெள்ளி 1 கிலோ 583 கிராம் கோயிலுக்கு வருமானமாக கிடைத்தது.