தேரோட்டம் சொல்லும் தத்துவம் என்ன?
ADDED :1218 days ago
தேர் என்பது மனித உடல். அதை இழுக்கும் குதிரைகளே ஐம்புலன்கள். மனம் என்பது கடிவாளம். அதை சரியாகச் செலுத்தும் அறிவே தேரோட்டி. பவனி வரும் கடவுளே நம் உயிர். அறிவுத் திறத்தால் நமக்குள் இருக்கும் கடவுளை உணர்ந்து வாழ்வதே தேரோட்ட தத்துவம்.