திண்டுக்கல் வாராஹி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா
ADDED :1239 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு ரதவீதி ஜான் பிள்ளை சந்து வாராஹி அம்மன் கோயிலில் நடந்த நவராத்திரி விழா சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவ் விழா ஜூன் 30 துவங்கி நடந்து வருகிறது. தினமும் அம்பாள் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், மகாலட்சுமி அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஜூலை 9 வீதியுலா, ஜூலை 10 ஊஞ்சல் உற்ஸவம், ஜூலை 11 தெப்ப உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.