உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடனபாதேஸ்வரர் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

நடனபாதேஸ்வரர் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது.நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம் ஹஸ்த தாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமம் நடந்தது.

சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது.தினமும் சிறப்பு அபிஷேகம் சூரியபிரபை, விமானம், பூதவாகனம், நாகம், ரிஷபம், யானை, குதிரை போன்ற வாகனங்களில் தினமும் நடனபாதேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வருகிறார். 8ம் தேதி திருக்கல்யணம், 10ம் தேதி திருத்தேர் உற்சவம், 14ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். செயல் அலுவலர் மகாதேவி கணக்கர் சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !