முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
ADDED :1236 days ago
முக்கூடல்: முக்கூடல் முத்துமாலையம்மன் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் 10 நாட்கள் நடக்கும் ஆனித்திருவிழா புகழ்பெற்றது. இத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து உச்சிகால பூஜை, அன்னதானமும் நடந்தது. மாலையில் தீர்த்தவாரி, இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா ஒவ்வொரு நாளும் நடக்கிறது. ஒவ்வொரு நாள் திருவிழாவையும் ஊர் மக்களும், கோயில் நிர்வாகமும் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை விழாக்கமி ட்டியினர் செய்து வருகின்றனர்.