திண்டுக்கல் சீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1236 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் ஜூன் 27 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கி நடந்து ருகிறது. தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், காலையில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொர்ந்து, முத்துப்பல்லக்கில் வீதியுலா நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஜூலை 5 காலை 6:00 ணிக்கு தேரோட்டம், ஜூலை 7 தெப்ப உற்ஸவம், ஜூலை 8 ஊஞ்சல் உற்ஸவம் நடக்க உள்ளது.