உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னை தமிழில் வழிபாடு கோவில்களில் கண்காணிப்பு

அன்னை தமிழில் வழிபாடு கோவில்களில் கண்காணிப்பு

சென்னை: கோவில்களில் அன்னை தமிழ் வழிபாடு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என, அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.அத்துறை அறிக்கை:அன்னை தமிழில் வழிபாடு, 47 முதுநிலை  கோவிலில் உள்ளது.முதல் கட்டமாக சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், தமிழில் வழிபாடு துவக்கப்பட்டது. தமிழில் வழிபாடு செய்ய ஏதுவாக, சிவன், அம்மன், விநாயகர், முருகன், பெருமாள் உள்ளிட்ட, 12  இறைவன் போற்றி நுால்கள் வெளியிடப்பட்டு உள்ளன.கோவில் புத்தக விற்பனை நிலையத்தில், இந்நுால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சட்டசபை அறிவிப்புப் படி, தமிழில் வழிபாடு செய்யும்  அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு கட்டணச் சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வழிபாட்டுக் கட்டணத்தில், 60 சதவீதம் அர்ச்சகருக்கு பங்குத் தொகையாக வழங்கப்படுகிறது.சென்னை,  மயிலாப்பூர் கபாலீஸ்வரர், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், பழநி தண்டாயுதபாணி உள்ளிட்ட அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தினசரி, 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள்,  தமிழில் வழிபாடு செய்ய பதிவு செய்து வருகின்றனர்.தமிழில் வழிபாடு திட்டத்திற்காக, ஒவ்வொரு கோவிலிலும் கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !