உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில்களில் பாலாயம் வேள்வி துவக்கம்

பழநி கோயில்களில் பாலாயம் வேள்வி துவக்கம்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்களான பழநி நகரில் உள்ள பட்டத்து விநாயகர் கோயில், கிரி வீதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இடும்பன் மலைக்கோயில், ஆயக்குடி சோழிஸ்வரர் கோயில், கோயில் ஆகிய கோயில்களுக்கு விமான பாலாலய நிகழ்ச்சி நேற்று மாலை 5:00 மணிக்கு அனுமதி பெறுதல், தலப்புனிதமாக்கல், திருக்குடம் நடந்தது. மாலை 7:00 மணிக்கு முதற் கால வேள்வி துவங்கியது. இரவு 8:00 மணிக்கு நிறைவு வேள்வி நடைபெற்றது. இன்று வேணுகோபால பெருமாள் கோயில், பட்டத்து விநாயகர் கோயில், பாதிரிவிநாயகர் கோயில், கிரி வீதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இடும்பன் மலைக்கோயில், ஆயக்குடி சோழிஸ்வரர் கோயில், சண்முக நதி துர்நாச்சி அம்மன் கோயில்களுக்கு விமான பாலாலயம் அதிகாலை 5:00 மணி முதல் நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இணைஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !