திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
ADDED :1528 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், சிவகாமி அம்மையார், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நடராஜர் பெருமான், சிவகாமி அம்மன் ஐந்தாம் பிரகாரம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.