காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் உலா
ADDED :1193 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவிலில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாளான நேற்று காலை, அதிகார நந்தி உற்சவம் நடந்தது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில், மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது.இக்கோவிலில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி காலை, இரவு என, தினமும் சுவாமி, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலா வருகிறார். ஐந்தாம் நாள் உற்சவமான, அதிகார நந்தி சேவை உற்சவம் நேற்று காலை நடந்தது. இதில், மருகுவார்குழலி அம்பிகையுடன், அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார். இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.