விளையாட்டு மாரியம்மன் கோயிலில் சக்தி கரகம் பவனி
ADDED :1303 days ago
சரவணம்பட்டி: சரவணம்பட்டி விளையாட்டு மாரியம்மன் கோவில் 10ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவத்தில் சக்தி கரகம் பவனி வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கோவை சரவணம்பட்டியில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் 10ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்று சிரவணமாபுரீசுவரர் கோயிலிலிருந்து சீர் வருதல், அம்மன் அழைத்தல் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை 5.00 மணி முதல் மாரியம்மன் கோயிலிலிருந்து சக்தி கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சியும், அக்னி சட்டி ஊர்வலமும் நடந்தது. மாலையில் அலகு குத்தி தேர் இழுத்தல், முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை மறு பூஜை நடக்கிறது.