உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரான்பட்டி மலை நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா

பிரான்பட்டி மலை நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா

எஸ்.புதூர்: எஸ்.புதூர் அருகே பிரான்பட்டி மலை நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. கடந்த ஜூன் 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. பெண்கள் தினமும் இரவு கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். ஜூலை 5ம் தேதி இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூச்சொரிதல் நடந்தது. பெண்கள் கோயில் முன்பாக பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை கிடா வெட்டப்பட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !