முளைக்கொட்டு உற்ஸவ விழா
ADDED :1194 days ago
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே கைக்கோளர்மடம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஜூன் 26., அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் கோயில் முன்பு கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் நடந்தது. இன்று மாலை 4 மணியளவில் முளைப்பாரி ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து ஊரணியில் பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை செங்குந்த முதலியார் உறவின்முறையினர் செய்திருந்தனர்.