முனையடுவ நாயனார் கோயிலில் நடராஜருக்கு அபிஷேகம்
ADDED :1249 days ago
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி முனையடுவ நாயனார் கோயிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன உத்திர அபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு திருமஞ்சன திரவியம், மஞ்சள் பொடி, மாபொடி, பால், தயிர், விபூதி, தேன், பஞ்சாமிர்தம், பழங்கள், சந்தனம், பன்னீர் உட்பட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது சிவனடியார்களால் திருமுறைகள் பாடினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.