இலங்கை திருக்கேதீச்சரம் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
இலங்கை: இலங்கையில் புகழ்பெற்ற திருக்கேதீச்சரம் கோயில் உள்ளது. இது தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் மன்னார் மாவட்டத்தில் உள்ளது. திருஞானசம்பந்தர் சுந்தரர் ஆகிய இருவராலும் பாடல்பெற்ற சிறப்புடையது.
ராஜராஜசோழன் இலங்கையை ஆண்டபோது ஆலயம் மீண்டும் கருங்கல்லால் கட்டப்பட்டது. தொடர்ந்து பலமன்னர்கள் திருப்பணி செய்த கோயிலாகும். பின்னர் நடந்த உள்நாட்டுப்போர்களில் கவனிக்கப்படாமல் சிதிலமடைந்திருந்த இக்கோயில் 1976 ல் மீண்டும் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. 2003 ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இக்கோயில் தற்போது இந்திய அரசின் உதவியுடன் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டு ஆனிஉத்திர நாளாகிய இன்று (6ம் தேதி) காலை கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. உலகம் முழுதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து தரிசித்தனர். திருக்கேதீச்சர திருக்கோயில் திருப்பணிச்சபையார் விரிவான ஏற்பாடுகளைச்செய்திருந்தனர். மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சிவஸ்ரீ சுவாமிநாத சிவாசாரியார் நயினாதீவு வாமதேவகுருக்கள் தலைமையில்,ராஜுகுருக்கள் மற்றும் சிவபுரம்பாடசாலை ஆசிரியர்கள் கண்ணன்குருக்கள் செந்தில்நாதகுருக்கள் ராஜேஸ்வரசிவாசாரியார் நடராஜசுந்தரகுருக்கள் மணிகண்டகுருக்கள் மற்றும் ஆலய தலைமை அர்சசகர் கண்ணன்குருக்கள் பாலாகுக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிவாசாரியார்கள் கலந்து பூஜைகளை நிகழ்த்தினர். தமிழகத்திலிருந்து வேதவிற்பன்னர்கள் ஒதுவார்கள் கலந்து கொண்டனர்.