உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழாம்பூர், சிவசைலம், கடையம் கோயில்களில் வருஷாபிஷேகம்

கீழாம்பூர், சிவசைலம், கடையம் கோயில்களில் வருஷாபிஷேகம்

ஆழ்வார்குறிச்சி: கீழாம்பூர், சிவசைலம், கடையம் கோயில்களில் வருஷாபிஷேகம் நடந்தது. கீழாம்பூர் காசிவிஸ்வநாதர் - விசாலாட்சி அம்பாள் கோயிலில் நடந்த வருஷாபிஷேக விழாவில் காலையில் கும்பஜெபம், தபாராயணம், சிறப்பு அபிஷேகம், சிறப்புதீபாராதனை நடந்தது. தாஜி பாய்ஸ் சார்பாக சிறப்பு சப்பர அலங்காரத்தில் சுவாமி - அம்பாள் வீதியுலா நடந்தது.


* சிவசைலத்தில் சிவசைலபதி - பரமகல்யாணி அம்பாள்கோயில் அருகே கருணை ஆற்றங்கரை முன் முப்புடாதி அம்மன் கோயில் உள்ளது. கோயிலில் நடந்த வருஷாபிஷேக விழாவில் கும்பஜெபம், தபாராயணம், விமானம்,மூலவர் அபிஷேகம், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தல், தீபாராதனை நடந்தது. கடையம் புதுகிராமம் கிருஷ்ணன் கோயிலில் நடந்த வருஷாபிஷேக விழாவில் கும்பஜெபம், தபாராயணம், திருமஞ்சனம், பூஜைகள் நடந்தது. கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தலும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !