நமஸ்காரம் அர்த்தம் தெரியுமா?
ADDED :4849 days ago
வணக்கம், நமஸ்காரம் என்பவையெல்லாம் பணிவைக் குறிக்கும் வார்த்தைகள். இவற்றில் நமஸ்காரம் என்ற சொல்லுக்கு வளைவது என்று பொருள். தனக்கென்று எதுவுமில்லாமல், இறைவனுக்கே சகலமும் அர்ப்பணம் என்று சரணாகதி அடைதல் என்ற பொருளும் இதற்கு உண்டு. அதனால் தான் கோயில்களுக்குச் சென்று இறைவனை வணங்குவதை நமஸ்காரம் என்றனர்.